Home > Drama, Forthcoming Events, Summer Drama Festival - 2010 > மதர் கிரியேஷன்ஸ் சி.வி. சந்திரமோகனுடன் ஒரு சந்திப்பு

மதர் கிரியேஷன்ஸ் சி.வி. சந்திரமோகனுடன் ஒரு சந்திப்பு

கோடைக்காலம் வந்தாலே பரபரப்புடன் காணப்படுபவர்கள், சென்னையிலுள்ள நாடகக்குழுக்கள்தான். காரணம் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் கோடை நாடக விழா.

வருடம் தோறும் ஒன்பது நாட்கள் சென்னை நாரதகான சபா அரங்கத்தில் போட்டி நாடகங்கள் நடத்தப்படுகின்றன. நாடகக்குழுக்கள் மற்றும் அவர்கள் நாடகங்கள் பற்றியும் சுவாரஸ்யமாய் விஷயம் கிடைக்கவேண்டி வலையை வீசினோம், நம் வலையில் முதலில் சிக்கியவர் மதர் கிரியேஷன்ஸ் நாடகக்குழுவின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் சி,வி, சந்திரமோகன்

ஒத்திகையின் பரபரப்பில் இருந்த அவரை நாம் ஓரங்கட்டி சிலகேள்விகள் வைத்தோம். இதோ அவரின் மினி பேட்டி

கேள்வி: நேத்ரதரிசனம் நாடகமேடையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியநாடகம். அதன்பின் ஏன் இந்த இடைவெளி?

சந்திரமோகன்: உண்மையை சொல்லணும்னா நல்லகதை கிடைக்கல
(ஆங்கிலபடம் அதிகம் பார்க்கவில்லையோ)
மதர்கிரியேஷன்ஸ் ஒரு கொள்கையுடன் நடத்தப்படுகிற ஒரு குழு. மனித உணர்வுகளின் மகத்துவத்தை மட்டுமே சொல்லணும், எதார்த்தமான காட்சிகள் இயல்பான வசனங்கள் மிகையில்லாத நடிப்பு இதுதான் எங்கள் அடிப்படை குறிக்கோள்.

கேள்வி: நேத்ரதரிசனத்தில் மூணு பேர். இதில் இரண்டு பேரா… ஒருத்தரா?

சந்திரமோகன்: மூணு பிளஸ் இரண்டு ஐந்து பேர் பிரியமுடன் அப்பாவுக்காக களம இறங்கியிருக்காங்க. அனைவருக்குமே சமமான சவாலான கதாப்பாத்திரங்கள் என்பதை உணர்ந்து தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: பிரியமுடன் அப்பா வழக்கமான கதையா ….வித்தியாசமான கதையா?

சந்திரமோகன்: கதையில் வழக்கமான வழக்கமில்லாத அப்படின்னு இல்லேங்கறது என்னுடைய தாழ்மையான கருத்து. எல்லாமே ஒண்ணுலேந்து பத்துவரைக்கும்தான், பதினொண்ணு அப்படின்னு எழுதினா மறுபடி ஒண்ணுதான் போடணும்.

பிரியமுடன் அப்பா கதையைப் பொருத்தவரைக்கும் ஒரேவரியில சொல்லணும்னா வயோதிகம் என்பது இரண்டாவது குழந்தை பருவம் அதை நாம் உணர்ந்தால் அவங்களை டீல் பண்றது சுலபம். இதைத்தான் பிரியமுடன் அப்பா சொல்லப்போகிறது. அப்பா மகன் உறவுதான் நாடகத்தோட கரு. ஆனால் படைப்பில் வித்தியாசம் இருக்கும்

கேள்வி: இளைஞர்கள் முதியவர்களை கவனிக்கறது இல்லன்னு குற்றம் சுமத்தப் போறிங்களா?

சந்திரமோகன்: நிச்சயம்மா இல்லை எங்க நாடகங்கள்ல எல்லா கதாபாத்திரங்களும் நல்லவங்களாத்தான் இருப்பாங்க சூழல்நிலைகள்
அவர்களுக்கு எதிராகவும் அவர்கள் நேர்மாறாக நடப்பதுபோல தோற்றத்தையும் கொடுக்கும். இன்றைய இளைஞர்கள் ரொம்ப புத்திசாலிகளாகவும் பிராக்டிகலாகவும் இருக்காங்க. அது மத்தவங்களுக்கு குறிப்பா பெரியவங்களுக்கு வேறமாதிரி தெரியும் அவ்வளவுதான். மொத்ததுலபார்த்தா இரண்டு பக்கமும் நியாங்கள் தெரியும்.

கேள்வி: இந்த நாடகத்தில் நடிக்கிறவங்க?

சந்திரமோகன்: வழக்கம் போல எங்கள் நாடகத்தயரிப்பாளர் ஜெயக்குமார், மது, சிவா, ரவிக்குமார், இவங்களோட கதையின் நாயகனாக நீண்டகால மேடை அனுபவமும் அபாரமான நடிப்புத்திறமையும் கொண்ட T.D.சுந்தர்ராஜன் நடிக்கிறார். இது எங்கள் குழுவுக்கு மிகப்பெரிய பலம்.

வசன ஒத்திகைகள் காதில் விழ ஏப்ரல் 29 அன்று நாரத கான சபா அரங்கில் மேடையேற இருக்கும் ’பிரியமுடன் அப்பா’ நாடகத்திற்கு நம்முடைய வாழ்த்துக்களை கூறி விடைபெற்றோம்.

Advertisements
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: