Home > Drama Reviews, Summer Drama Festival - 2010, Theater > Drama Reviews from Theatre lovers -” Priyamudan Appa”

Drama Reviews from Theatre lovers -” Priyamudan Appa”

The recently concluded Summer Drama Festival of Kartik Fine Arts, Chennai has showcased nine new tamil stage plays and the prize distribution function was held recently.

Kartik Fine Arts have invited nataka rasikas (theatre lovers) to review the plays and selected best reviews for each play. We will be publishing the reviews sent by  theatre lovers and in that series, we are publihsing the reviews of “PRIYAMUDAN APPA”  a play which has been awarded the Best Play at the festival:

TDS and Shiva in "Priyamudan Appa"

Anuradha Ramamurthy, Chennai 14

மதர் கிரியேஷன்ஸ், “பிரியமுடன் அப்பா –  29.04.2010

இன்றைய இளைய தலைமுறையினருக்கும் வயது முதிர்ந்த பெற்றோர்களுக்கும் இடையே பூதாகரமாக வளர்ந்து வரும் ”இடைவெளி பிரச்சனை” யை மையமாக வைத்து பின்னப்பட்ட கதைதான் “பிரியமுடன் அப்பா” இன்றைய காலகட்டத்தில் வீட்டுக்கு வீடு நடைபெறும் சம்பவம்தான், “பிரியமுடன் அப்பா”.  ஒரே செட்டில் நடைபெறுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது புதுமை மட்டுமல்ல ஒரு துணிகரமான முயற்சி. மனப்பூர்வமான பாராட்டுக்கள்.  மருந்திற்கு கூட பெண் வாடையின்றி அரங்கேற்றப்பட்டுள்ள ஒரு நாடகம்.  ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னர் துணிந்து எடுக்கப்பட்ட ஏ.வி.எம் நிறுவனத்தின் ”அந்த நாள்” என்ற திரைப்படத்தைப் போன்ற புரட்சி படைப்பே இந்த நாடகம். நாடகத்தில் சிறிதும் காமெடி இல்லை என்றாலும் தொய்வின்றி கதை நகர்த்தப்பட்டுள்ளது.  நாடக வசனங்கள் பட்டு கத்தறித்தாற் போல நறுக்-சுருக்.  உதாரணம், கதாநாயகன் சுரேஷ் தன்னையும் அவரது தகப்பனாரையும் ஒப்பீடு செய்யும் விதம்: He is a dependant – I want to be independent மேலும் சுரேஷின் நண்பன் அவனது தகப்பனார் இரண்டாம் திருமணம் செய்யாத செயலுக்கு கூறும் காரணம்:

  • அவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு மனைவி கிடைக்கலாம், ஆனால் சுரேஷுக்கு மீண்டும் ஒரு தாய் கிடைக்க மாட்டாள்
  • மரணத்தை நிர்ணயம் செய்பவர் ஸ்வாமி (கடவுள்) – ஸ்வாமிஜி இல்லை

கதாநாயகன் சுரேஷ்  –  அவனது கோணத்தில் அந்த பாத்திரத்தை அலசி ஆராய்ந்தால், அவனது பக்கத்தில் கூட நியாய்ம் இருக்கிறது.  தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டி இன்றைய எதார்த்த எந்திர கதி வாழ்வில் பாசத்தையும் அன்பையும் பெற்ற தகப்பனிடம் காட்ட முடியாத அளவிற்கு அதற்கு ஏற்ற நேரம் ஒதுக்க இயலாதவன்.  அவனது பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் அவன் அவரை வெறுத்து ஒதுக்கவில்லை – ஒதுங்கி வாழ வேண்டி ஆஸ்ரமத்தில் கொண்டு விட்டுள்ளான்.  கதாநாயகன் சுரேஷ் – நல்ல யதார்த்தமான நடிப்பு – பாராட்டுக்கள் –  கதாபாத்திரமாகவே மாறியுள்ளார். வயதான தந்தை பாத்திரம் –  பாசத்தையும் அன்பையும் பெற்ற மகனிடமிருந்து எதிர்பார்த்து ஏமாற்றமடையும் பாத்திரம்.  வீட்டில் சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் அவர் ஸ்வாமிஜியின் ஆஸ்ரமத்தில் சிவாவின் அன்பிற்கும் பாசத்திற்கும் கட்டுபட்டு சாப்பிடுவது –  முட்டி வலிக்கு தைலம் தேய்த்து விட மறுக்கும் சுரேஷ் – மற்றும் சிவாவின் இதமான பரிவும் மிக சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது.  மிக நல்ல முறையில் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.  ஸ்வாமிஜி, சிவா பாத்திரங்கள் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டு மிகையற்று செயற்கை பூச்சின்றி உருவாக்கப்பட்டுள்ளது.  பாராட்டுக்கள். இயல்பான நடிப்பு. பாசத்தையும் அன்பையும் பெற்ற மகனிடம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடையும் தகப்பன் மரணத்தை கண்டு இவ்வளவு தூரம் அச்சமடைய வேண்டியதில்லை.  மரணம் ஒரு தொல்லையில்லை.  அதுவும் வாழ்வில் ஒரு அங்கம் என்கிற acceptance கைகூடி வராத ஒரு பாத்திரம்.   உண்மையில் மரணம் என்பது ஒரு மோன நிலை.  அதைக் கண்டு அச்சப்பட வேண்டியதில்லை.  அதனை ஆவலோடு அமைதியாக எதிர் நோக்கும் பாத்திரமாக முடிந்தால் மாற்றியமையுங்கள்.  இது ஒரு சிறிய அரிவுரை மட்டுமே.  கட்டாயம் எதுவுமில்லை. நாடக படைப்பாளி, நடிகர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.  கலைப்பணியில் மேலும் மேலும் சிறக்க ஆண்டவன் அருள் புரியட்டும்.

PRIYAMUDAN APPA                                          Review  by M.V. Vijayakumar If  I had a son, I will write to him like this about this play: My Dear Son, This is not my usual letter, so you read it fully. This is about a Tamil play I saw today in Kodai Nataka Vizha of Kartik Fine Arts. When I returned to Chennai, 10 years back I thought Tamil Theatre has not grown up after stalwarts like TKS, Poornam, Komal, Cho, Manohar left the arena.When compared to marathi/hindi theatre, it was not progressive. But when I became a kartik member, I realized they are on a mission to revive socially sensitive and qualitatively superior tamil theatre.  Certainly their efforts have yielded rich dividends. Today’s play, “Priyamudan Appa” is a fine testimony to this.  This is about an unlucky father who has been abandoned by his only son.  He is in an ashram where he gets the  best attention.  The Swamiji and his sevak takes care of him like a child. Yet his heart yearns for his son’s love. The son feels his father is a disposable waste.  But for the father son is the whole world. The same father when his son was a child held his hand to walk and taught him to spell and count.  When father needs his son’s shoulder to lean it is denied by the son.  He is not even willing to give a caring look/patient hearing.  Distressed father gives a parting E-talk and sends the pen drive to his techy son.  After listening to the E-talk, son realizes his folly and rushes to see his father.  But he could see him only withing the photo frame. This is a very simple story.  But the format/script is poetic.  This script mirrors the ugly face of the aspiring middle class youth .  It is a sort of righteous indignation of the declining moral values of the middle class. There are just five characters in the script and there is no female cast.  T.D. Sundararajan as the hapless father gives an incredible performance.  Madhu, the ambitious son is the very embodiment of everything wrong with many aspiring young men-crass, brash, razzmatazz.  Other supporting actors gives their best and enrich the script.  Usually Writers tend to project the son as holy cow and daughter-in-law the culprit.  Here the director has made a welcome deviation.  On the whole in terms of unity of image, metaphor and tone, this is an excellent piece of  creation. My son, you and me continue as friends – so the moral preaching is not for you.  If you see this play you will appreciate it for its histrionics and aesthetic value.  But for many youngsters this can help as a guide for course correction. Best Wishes Your loving Dad

  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a comment