Home > Drama Reviews, Summer Drama Festival - 2010 > Drama Reviews from theatre lovers – “PAVITHRA”

Drama Reviews from theatre lovers – “PAVITHRA”

Drama review from nataka rasikas for the play, “PAVITHRA” by Kovai Anuradha, produced by Goodwill Stage, presented at the Summer Drama Festival 2010 at Chennai:

பவித்ரா”    – விமர்சகர் V. கெளசல்யா

நீண்ட நாட்களுக்குப் பிறகு உண்மையிலேயே ஒரு “நாடகத்தை”  பார்த்தேன்.  ஆம்.  நாடகத்திற்கே உரிய அம்சங்களான கதை, வசனம், நடிப்பு ஆகிய அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தன.

முக்கிய்ழமாக கதை.   மகாதேவ கனபாடிகளின் ஒரே மகள் பவித்ரா நன்கு படித்தவள்.  அமெரிக்க கனவோடு வாழ்பவள்.  அவள் ஆசைப்பட்டபடியே வாழ்க்கை அமைந்து புருஷனோடு அமெரிக்கா போகிறாள்.  ஆனால் கணவனாக அமைந்தவன் அவளை வீட்டில் வைத்து கொடுமைப் படுத்த, இல்வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாத அவனிடம் இருந்து விலகி பெற்றவர்களிடமே வந்துவிடுகிறாள்.  கணவனை பிரிந்து வந்த காரணத்தை கேட்டால் தந்தை ஹார்ட் அட்டாக் வந்து பிரிந்து  விடுவாரோ என்ற நினைப்பில் உண்மை சொல்ல மறுக்கிறாள்.

இதனிடையில் கணவனும் அவனது தந்தையும் வந்து பவித்ராவை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கும்படியும் இல்லாவிட்டால் கனபாடிகளின் குடும்ப கெளரவம் கெட்டு விடும் என மிரட்டி சில நாட்களில் அமெரிக்கா கிளம்ப தயார் பண்ணி வைக்கும் படி சொல்லிவிட்டு செல்கின்றனர். இதுவரையில் கதையினுடைய ‘சஸ்பென்ஸ்’ காப்பாற்றப் படுகிறது.  கனபாடிகளைப் போலவே நாமும் காரணத்தை அறிய துடிக்கிறோம்.  காரணத்தை அறியும் போது அதாவது மகள் தாயிடம் விவரம் கூறும் போது (கனபாடிகளும் விலகி நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார்).  கனபாடிகள் மட்டுமல்ல, அரங்கமே அதிர்ச்சிக் கடலில் மூழ்குகிறது.

“ஆம்படையான் – பொண்டாட்டிக்குள்ளே ஆயிரம் பிரச்சனை வரும்.. அதுக்காக விலகிவிடலாமா என கேட்கும் கனபாடிகளே மகளை விவாகரத்துக்கு மனு போட செய்து மகளுக்கு மறு விவாகமும் செய்து வைக்கிறார்.

இதிலே கனபாடிகளாக நடிப்பவர் திருமண மந்திரங்களை சொல்லி அதற்கு விளக்கமும் சொல்கின்ற போது நமக்கு பெரும் ஆறுதலாக இருக்கிறது.  இன்னும் நமது கலாச்சாரத்தை கட்டிக் காக்க மகாதேவ கனபாடிகளைப் போல சிலராவது இருக்கிறார்களே என்று பெருமிதப்பட வைக்கிறது.  நாடகம் ரசிகர்களின் மனதில் பவித்ரமான இடத்தை பிடித்துக் கொள்கிறது.

பவித்ரா  – விமர்சகர் கே. சீனிவாசமூர்த்தி, சென்னை-37

கலைமாமணியின் கதை ஆழமானது. அமெரிக்க கனவு வாழ்க்கை நீர்க்குமிழியாய் போக பவித்ரா தன் தந்தையின் உயிரை பாசத்தை நினைத்து மறுபடியும் அமெரிக்காவிற்கு கையாலாகாத கணவனோடு செல்ல தயாரான பொழுது விஷயம் தெரிந்த கனபாடிகள் விவாகரத்து பெற்று மகளை தன் சிஷ்யனுக்கு மணமுடிக்கிறார். இது கதை.

நடிப்பு  –  மகாதேவ கனபாடிகள் (ரவிக்குமார்) அச்சு அசலாய் வாழ்ந்து நவ ரசங்களையும் காட்டி அக்மார்க் நடிப்பில் ஜொலிக்கிறார்.  அருவி போல தங்கு தடையின்றி வசனம் பேசுவதில் அவருக்கு நிகர் யாருமில்லை.  பாத்திரத்துக்கு உயிரூட்டி உள்ளத்தை கொள்ளையடித்துவிட்டார்.  ஆனந்தி – அனுபவ நடிகை. அழகிய மடிசாரில் விதவித புடவைகளில் அற்புதமாய் நடித்தார். நிறைவான பணி.  பவித்ரா (மகேஸ்வரி) இன்னும் வசனங்களை அழுத்தமாய் பேசி நடித்திருக்க வேண்டும்.  பரவாயில்லை ரகம்.  கதானாயகன் கணேஷ் (சீனிவாசன்) வசனம் அழகாய் பேசினாலும் தோற்றப் பொலிவு மிஸ்ஸிங்.

மியுசிக் மிக மிக அனுசரனை. செட் லைட் எல்லாம் கச்சிதம்.

கோவை அனுராதாவின் திறமைக்கும் தகுதிக்கும் ஒரு சான்று இந்த நாடகம்.

  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: