Home > Drama Reviews, Summer Drama Festival - 2010 > Drama Reviews from theatre lovers – “ENAKKUL IRUVAR”

Drama Reviews from theatre lovers – “ENAKKUL IRUVAR”

Drama review from nataka rasikas for the play, “Enakkul Iruvar” by Ananthu  produced by Rail Priya presented at the Summer Drama Festival 2010 at Chennai:

எனக்குள் இருவர்   – விமர்சகர் TK சீனிவாசன்

கதை, வசனம், முக்கிய கதாபாத்திரம் எற்று அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது – ஆகிய எல்லாவற்றிலும் மிளிரும், ‘பட்டாபி – அனந்து’ வுக்கு ஒன்று அல்ல சில பல விருதுகள் கொடுக்கலாம்!

அவர் கண்ணுக்கு மட்டுமே புலப்படும் நல்ல மனது, கெட்ட மனதாக வரும் கதாபாத்திரங்கள் நிதானமாகப் பேசி பட்டாபியை அல்லாடச் செய்வது சிறப்பு.  இவர்கள் “நான் தான் நீ” , “நீ தான் நான்  “ என்று பேசி அவரவர் குணாதிசியங்களை வெளிப்படுத்தி பட்டாபியை தம் வசப்படுத்துவ்கிறார்கள்.  இறுதியில் பட்டாபி நல்லது-கெட்டது இரண்டும் தேவை என்ற முடிவுக்கு வருவதாக தங்களுடன் சொல்வது நன்றாக இருக்கிறது.

“நல்லவன்னா இளிச்சவாயனா” , “உன் கடிக்கு அந்த அடி பரவாயில்லை “ போன்ற வசனத்துணுக்குகள் நன்றாக இருந்தன.

நல்ல மனதின் தாக்கத்தில், அமெரிகையாக பேசி தன் வயப்படுத்திக் கொள்ள முயலும் சாதுர்யம் – கெட்ட மனதின் ஆக்கிரமிப்பில் ஆரவாரமாக ஆட்கொள்ளும் அதிகாரத்தோரணை – இந்த இரண்டிலும் சிறப்பாகப் பேசி நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் அனந்து – பட்டாபிக்கு சிறந்த நடிகர் பரிசு கொடுக்கலாம்.  “இவரது மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரிது”!

மொத்தத்தில் மனித யதார்த்தத்தை நகைச்சுவையோடு சுவாரசியமாக கொடுத்த சிறந்த நாடகம்.

எனக்குள் இருவர்  – விமர்சகர் RNS

எனக்குள் இருவர் என்று பட்டபியை படாத பாடு படுத்தும் மனதின் கதை.  புதிய படைப்பு.  வித்தியாசமான வேதத்திற்கு முரண்பாடான மனோத்தத்துவம்!.. ஆகவே ஏற்க தயக்கம்.

கெட்ட மனதும் தேவை! மனிதனின் செக்யூரிட்டிக்காக என்று பட்டாபி கதையை முடிப்பது, அமெரிக்கா Atom Bomb வைத்திருப்பதுடன் உவமானமாக கூறுவது சற்றும் பொருந்தாதது.  நல்ல மனம் பெற்றாலே அன்று கெட்ட மனம் தேய்ந்து அழிந்தாலே ஒழிய மனித மனத்திற்கு நிம்மதி இல்லை!.  விமோசனமும் இல்லை.. இதுதான் வேதவாக்கு.  அதுவே உண்மை.  கதாசிரியர் இதை கவனித்து மாற்றம் செய்தால் அவர் மனம் நல்ல மனமாக வழி உண்டு.. அவ்வாறே பார்ப்பவர்களும் நல்ல மனதானவர்கள் ஆவார்கள்.

மற்றபடி பட்டாபி, அசிஸ்டெண்ட் நடிப்பு பிரமாதம்.  ஆடிட்டரின் பெண்ணின் வசனம் clarity தேவை.

சித்தியின் நடிப்பு பிரமாதம்.  அவர் தம்பியின் நடிப்பு வசனம் பிரமாதம்.

கதை சூடு பிடிக்க சற்று நேரம் பிடித்தது.  பிள்ளையாரை கதை/டிராமா துவங்கியதும் வணங்குவது ஒரு வழக்கம் போலும்.. “மாமா…மாப்பிள்ளே” நாடக்த்திலும் அதே போல!

டிராமாவை 1 ½ மணி நேரமாக குறுக்கினால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: