Home > Event Reviews, Theater > அரை சதம் கண்ட குடந்தை “மாலி”

அரை சதம் கண்ட குடந்தை “மாலி”

Mali conferred with Life time achievement award


நாடக உலகில் அரை சதம் காண்பது என்பது மிகப் பெரிய விஷயம்.  அதை சாதித்துக் காட்டிய குடந்தை மாலிக்கு சமீபத்தில் மாபெரும் விழா எடுக்கப்பட்டது.  ஐந்து நாள் விழாவாக சென்னை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில் கோலாகலம் பூண்டது.

துவக்க விழாவில் பேசிய திரு எஸ்.வி. சேகர், மாலியின் நாடகங்கள் controversy create பண்ணினாலும் அதையும் மீறி சாதித்துக் காட்டியிருக்கிறது என பாராட்டினார்.  திரு. ஏ.ஆர்.எஸ் அவர்கள் குறிப்பிடுகையில் ”கடவுள் எங்கே” என்ற மாலியின் நாடகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உட்பட பல ஜாம்பவான்களால் பாராட்டப்பட்டது என்று கூறினார்.

துவக்க விழாவை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மாலியின் ஐந்து நாடகங்கள்……”சட்டம் யார் பக்கம்” என வினா எழுப்பி, “ஆத்ம விசாரணை” செய்து “கடவுள் எங்கே” என்று சிந்தித்து “ஞானபீட”த்தில் அமர்ந்து எல்லாரும் “நம்மவர்கள்” தான் என்று நாடகங்கள் ஐந்தும் முடிந்ததும் ஐந்தாம் நாள் மாலிக்கு பாராட்டு விழா….அன்றே நுங்கம்பாக்கம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாலி அவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருதும் வழங்கப்பட்டது.

திரு. திரிசக்தி சுந்தரராமன் அவர்களின் தலைமையில் நடந்த  விழாவில், திரு. ஒய்.ஜி. மகேந்திரன், திரு டெல்லி கணேஷ், திரு. சபாரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு மாலியை பாராட்டினர்.  திரு. ஒய்.ஜி. மகேந்திரன் அவர்கள் பேசும் போது திரு மாலி அவர்கள் நாடகத்திற்காகவே தன்னை அர்பணித்துக் கொண்டவர் என குறிப்பிட்டார்.  மாலியின் நாடகங்களிலிருந்து பல செய்திகளை தெரிந்துக் கொள்ள முடிகிறது என டெல்லி கணேஷ் பாராட்டினார்.

இறுதியில் மாலியின் ஏற்புரை.  தான் வந்த பாதையை குறிப்பிட்டு…தனக்கு தமிழ் ஊட்டிய திரு. ம்.பொ.சி, தான் மேடை ஏற காரணமாக இருந்த திரு என்.கே.டி முத்து, மற்றும் சக நடிகர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று பலருக்கும் நன்றி கூறினார்.

விழாவினை தொகுத்தளித்த இசைக் கவி ரமணனின் தமிழ் தேனாக ஒலித்தது விழாவின் சிறப்பம்சமாக திகழ்ந்தது.

  1. No comments yet.
  1. July 23, 2010 at 5:22 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: