Home > Drama Reviews, Reviews Walkthrough, Theater > கூத்தபிரான் நாடக விமர்சனம் – தினமணி

கூத்தபிரான் நாடக விமர்சனம் – தினமணி

நடிப்பில் அசத்திய மூன்று தலைமுறைகள்!

 

First Published : 03 Dec 2010 03:22:44 AM IST

 

 

கூத்தபிரான், வானொலியில் நீண்ட காலம் பணிபுரிந்தவர். மேடை நாடகம், சின்னத்திரை ஆகியவற்றில் நடித்து பழுத்த அனுபவம் பெற்றவர். 1985-ல் அவரால் நிறுவப்பட்ட “சென்னை நவபாரத் தியேட்டர்ஸ்’ நாடகக் குழுவுக்கு இது வெள்ளி விழா ஆண்டு. வெள்ளி விழா கொண்டாட்டமாக “காசிக்குப் போன கணபதி’ “சுபஸ்ய சீக்கிரம்’ ஆகிய நாடகங்கள் அவர் குழுவினரால் மைலாப்பூர் பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள “தட்சிணாமூர்த்தி’ ஆடிட்டோரியத்தில் நடத்தப்பட்டன.

காசிக்குப் போன கணபதி: கணபதி “பொய் சொல்வது தவறானது, பொய் சொல்வோர்க்குத் துணைபோதல் அதைவிடத் தவறானது’ என்ற கொள்கை உடையவர். காந்தி படத்தைப் பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் அளவுக்குக் கொள்கைப் பிடிப்பு உள்ளவர். அவர் மனைவி தங்கம் என்கிற தங்கா மாமி அவருக்கு எதிர்மாறாக, எதற்கும் “அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளும் குணம் உடையவர். தங்காமாமி கணபதிக்குத் தெரியாமல் சீட்டுக்கட்டி சங்கடத்துக்குள்ளாகிறாள். வீட்டைவிட்டு அனுப்பப்பட்ட வேலைக்காரன் சின்னக் கண்ணன் தங்காமாமியின் சகோதரியின் மகனென்று தெரிய வருகின்றது. மனம் மாறி, கடைசியில், சின்னக்கண்ணனிடமிருந்து வரும் கடிதத்தைக்கொண்டு அவனைத் தேடி காசிக்குச் செல்கிறார்கள். சின்னக் கண்ணன் காசியில் நிரந்தரமாய்த் தங்கி வேதம் படிக்கப் போவதாய்க்  கூற, கணபதியும், அவர் மனைவியும் அவன் நிழலிலேயே காசியில் தங்கிவிட முடிவு செய்கின்றனர்.

நெளிவு,சுளிவு, திகில் திருப்பங்கள் இல்லாத ஓர் எளிய கதை “காசிக்குப் போன கணபதி’ யின் கதை. வீட்டில் அன்றாடம் புழங்குகிற  எளிய வசனங்கள். தங்கா மாமியாக நடித்த சித்ரா தன்னுடைய இயல்பான நடிப்பால், கணவனுடன் ஊடல், கோபதாபங்கள், வருத்தங்கள் என எல்லா உணர்ச்சிகளையும் கொட்டி, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். கணபதியாக கூத்தபிரானும், சின்னக் கண்ணனாக ரத்னமும் நாடகத்துக்கு மெருகூட்டினர். அயல் நாட்டுப் பெண்ணின் உடை அலங்காரம் கன கச்சிதம். வீனஸ் எண்டெர்டெயினர்ஸின் பின்னணி இசை இனிமையாக இருந்தது. நாடகத்தின் கடைசி காட்சியில் ஆலயங்கள் நிறைந்த காசியையும், அழகான கங்கை நதிக் காட்சிகளையும், வீடியோவில் படம் எடுத்து, மேடைத்திரையில் காட்டியது நன்றாக இருந்தது.

கூத்தபிரான் கதை வசனம் எழுத, என்.ரத்னம் இயக்கிய இந்நாடகத்தை  பூர்ணம் விசுவநாதனுக்குச் சமர்ப்பித்தார்கள்.

சுபஸ்ய சீக்கிரம்: நவபாரத் தியேட்டர்சின் இரண்டாம் நாள் விழாவில் “சுபஸ்ய சீக்கிரம்’ என்ற நாடகம் நடத்தப்பட்டது.

ராஜூ, தன் மனைவி, மகனோடு விடுமுறையைக் கழிக்க, சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றபோது, அங்கே தன் பெரிய அத்தையின் நிர்ப்பந்தத்தால், மனைவி பட்டுவின் தங்கை ராஜியின் திருமணச் செலவை ராஜூ ஏற்கிறான். திருமணத்தின் போது குடும்பத்தை நிர்க்கதியாக்கி ஓடிப்போன ராஜியின் அண்ணன் தவறை உணர்ந்து திரும்பி வந்து தானே திருமணத்தை நடத்த முன்வரும்போது, பெரிய அத்தையின் குறுக்கீட்டால் திருமணத்தை நடத்திவைக்கும் பாக்கியம் ராஜூவுக்கே கிடைக்கிறது. ரத்தினச்சுருக்கமான இந்தக்கதையை கூத்தபிரான் வசனத்துடன் எழுத, என்.ரத்தினம் நாடகத்தை இயக்கினார்.

ஐம்பது ஆண்டுகால மேடை நாடக அனுபவம் பெற்றுள்ள, எண்பது வயதுக்காரரான கூத்தபிரான், துணிச்சலாக பிரதான பாத்திரமான பெரிய அத்தை பாத்திரத்தின் வேடமேற்று நடித்து எல்லோருடைய பாராட்டையும் பெற்றார். அவருடைய மகன்கள் ரத்னம், கணேசன் இருவரும் ராஜூ, குமார் என்ற பாத்திரங்களில் நடிக்க, அவருடைய பேரன் ஆர்.விக்னேஷ் ராஜூவின் மகனாக பங்கேற்க, நாடக மேடையிலேயே முதன்முறையாக, ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறைக் கலைஞர்களையும் மேடையேற்றி கூத்தபிரான் புதுமையைப் படைத்து விட்டார்.

வாசு.

Advertisements
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: