Home > Drama Reviews, News, Theater > “தினமலர்” உலக நாடக செய்திகள்

“தினமலர்” உலக நாடக செய்திகள்

தாம்பா தமிழ் சங்க ஆண்டு விழா

மார்ச் 15,2012,09:36  IST

தாம்பா : தாம்பா தமிழ் சங்கம் சார்பாக ஜனவரி 28 ம் தேதியன்று சங்கத்தின் 15 ம் ஆண்டு நிறைவு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தாம்பா வால்ட்டர் சிக்ள்ஸ் உயர்நிலை பள்ளி அரங்கில் மாலை 5 :00 மணிக்கு துவங்கிய இவ்விழா இரவு 9 மணி வரை நடைபெற்றது. தாம்பா தமிழ் நாடக வாழ்த்து பாடலுடன் துவங்கிய இவ்விழாவில் “உண்மையே உன் விலையென்ன?” என்னும் சிறப்பான நகைச்சுவை நாடகம் தாம்பா மேடை நண்பர்கள் சார்பாக ரவி நாராயணன் இயக்கத்தில் அரங்கேறியது. இந்நிகழ்ச்சிற்கு தாம்பா மற்றும் சுற்றி உள்ள ஊர்களில் இருந்து திரளாக தமிழ் மக்கள் நாடக நிகழ்ச்சியினை கண்டு களிக்க வந்து இருந்தனர். இந்த நாடகத்திலே ரவி நாராயணன், ஷீலா நாராயணன், ஷ்ரேயா நாராயணன், வெங்கட் ஐய்யர், குமார், பார்வதி (நியூ ஜெர்சி), சுந்தரம் சண்முகம், பிரபாகரன் பாக்கம், பிரசன்னா மீனாக்ஷி, ஜெய கிருஷ்ணன், ராஜசேகரன், கிருஷ்ணமுர்த்தி, சுனிதா சரவணன், மற்றும் கோபாலன் ஆகிய அனைவரும் வெகு சிறப்பாக நடித்து, தங்களின் நடிப்பு திறமையினை வெளி காட்டினார்கள். எட்வர்ட் ஜெயராஜ் இந்நாடகத்திற்கு இசை அமைத்தார். முன்னதாக தாம்பா தமிழ் சங்க தலைவர் ரமேஷ் வாசுதேவன் அனைவரையும் வரவேற்றார். ரவி நாராயணன் அனைத்து சக நாடக கலைஞர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சி முடிவில் சுனிதா பிரபாகரன் நன்றியுரை தெரிவித்தார். இரவு உணவுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.

– தினமலர் வாசகர் ரமேஷ் வாசுதேவன்

  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: