Home > Drama Reviews, Drama2015 > Nadhimoolam Review by Siragu Ravi Chandran

Nadhimoolam Review by Siragu Ravi Chandran

விவேக் ஷங்கரின் ‘நதிமூலம்’ – நாடக விமர்சனம்.

சிறகு இரவிச்சந்திரன்.

Nadhimoolam

A Scene from K.Vivekshankar’s Nadhimoolam

ஒரு விஷயத்திற்காக விவேக் ஷங்கரைப் பாராட்டி ஆக வேண்டும். வித்தியாசமான நாடகங்களை ஒரு சுவாசம் போல அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். அவரது குழுவின் பெயர் பிரயத்தனா! அவரது நாடக முயற்சிகள், பிரம்ம பிரயத்தனா!

எழுத்தையே தொழிலாக, ஜீவன உபாயமாகக் கொண்ட விவேக், வயிற்றுக்கு சீரியலை நம்பியிருக்கிறார். வேட்கைக்கு சீரியஸை நம்பி இருக்கிறார். பாறைகளில் தான் ஒளிந்திருக்கின்றன சின்னச் சிலைகள்!

இது பூர்வ ஜென்ம சீசன் போலிருக்கிறது. விவேக்கும் அதையே ‘அனேகமாக’ தொட்டிருக்கிறார்! தெறிக்கும் வசனங்கள் இல்லை. இதை ‘பஞ்ச்’ என்று படிக்கவும். சமூகத்திற்கு போதனைகள் இல்லை. முக்கியமாக போதை சீன்கள் இல்லை. ஆனால் ஆளாளுக்கு தண்ணீர் குடிக்கிறார்கள். நதிமூலம் என்பதற்கான இயக்குனர் டச் எனக் கொள்வோம்.

நடித்த எல்லோரும் ஒரே வசன உச்சரிப்பு பாணியைக் கையாள்வது இயக்குனரின் பாதிப்பைக் காட்டுகிறது. இயல்பாக நடித்தவர் சிவாஜி சதுர்வேதி தான். அவருக்கு பாவம் அந்த மாடுலேஷன் வரவில்லை.

எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி முன்னால் நிற்பவர் கோபகுமார் ( பெயரெச்சம்) வேடத்தில் நடித்த கிரீஷ். மது, அஷோக்காக நடித்து கொஞ்சம் ஈர்க்கிறார். ஹரிணி கிருஷ்ணா கதை நாயகி ஜோதி. அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் வந்து போகும் இவருக்கு பாஸ் மார்க். நரேந்திர குமாரின் அஸ்வின் வேடமும் பிரேமா சதாசிவத்தின் டாக்டர் தேவகி வேடமும் கதைப் படகை நகர்த்தும் துடுப்புகள். அவ்வளவே!

யூகிக்கக் கூடிய கதையை, மேடையை முப்பங்காக்கி, வித்தியாச ஒளியமைப்பில் நிறுவி இருக்கும் விவேக் ஷங்கர் பாராட்டுக்குரியவர். தூக்கத்தில் துர்கனவுகள் காணும் அஷோக், படுத்தவுடன் ஒரு மரவட்டையைப் போல சுருட்டிக் கொள்வது நல்ல உத்தி. அஷோக் வரையும் சித்திரங்களை ஒரு ஜூம் ஷாட் போல பின்புலத்தில் தோன்றச் செய்திருந்தால், இன்னமும் நாடகத்தின் விறுவிறுப்பு கூடியிருக்கும்.

நாடகங்கள் அருகி வரும் இக்காலத்தில், இன்னமும் மேடையை விடாமல் தன்னோடு இணைத்துக் கொண்டிருக்கும் விவேக் ஷங்கர் போன்றவர்கள் வரவேற்கப் படவேண்டியவர்கள். அவரது பிரயத்தனங்கள் வெற்றி பெறட்டும்!

  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: