Home > Drama Reviews, Drama2015 > Nadhimoolam Review By Subashchandran

Nadhimoolam Review By Subashchandran

February 24, 2015

அன்புள்ள விவேக் சங்கர் அவர்களுக்கு,IMG_0572

வணக்கம். தங்களது படைப்பான நதிமூலம் நாடகம் பார்த்தேன். மிகவும் ரசித்தேன். முன் ஜென்ம கதை கோபி தன்னுடைய முன்கோபத்தால் தனது நண்பரை காரை ஏற்றி கொன்று விடுகிறார். அதுவும் முன்ஜென்மத்தில் பிராயத்சித்தமாக நண்பரின் பெண்குழந்தையை தத்து எடுத்து வளர்க்கிறார். இந்த ஜென்ம்த்தில் தான் செய்த கொலையை வளர்ப்பு மகளிடம் கூற அவள் அதனை பெரிதாக எடுத்தக்கொள்ளவில்லை. அவனுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பதை விளக்கும் விதமாக பிற்பகுதி விளக்குகிறது.

நகைச்சுவை துணுக்கு இல்லாமல் சீராக செல்கிறது. பெண்ணாக நடித்தவருக்கு 35வயது என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. அவர் நடிப்பில் ஒரு துடிப்பு தெரிகிறது. பிரேமா சதாசிவம் ,சிவாஜி சதுர்வேதி இயல்பாக நடித்துள்ளார்கள்.

கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு உங்கள் கைவண்ணத்தில் அருமை. அசோக், கோபி பாத்திரத்தில் நடித்தவர்கள் அருமை. உனக்கு தண்டனை கொடுக்காமல் சும்மா விடுவதே உனக்கு மிக பெரிய தண்டனை என்ற முடிவு அருமையிலும் அருமை.

வாழ்த்துகள்

சுபாஷ்சந்திரன்

%d bloggers like this: