Archive

Archive for the ‘Dhanushkoti Drama page’ Category

தனுஷ்கோடி நாடக விமர்சனம் – தினமலர்

November 27, 2010 Leave a comment

(தினமலர் 26.11.2010 நாளிதழில் இடம் பெற்ற விமர்சனம்)

(Source – Dinamalar dt. 26.11.2010)

’தனுஷ்கோடி’ நாடகம் கூறும் தகவல்

சென்னை ஷ்ரத்தா அமைப்பு தியேட்டர் கலைஞர்களை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. நடைபெறும் மழைக் காலத்தில் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் விதமாக சிறந்த நாடகங்களை அரங்கேற்றும் முயற்சியாக இந்த அமைப்பு வழங்கிய தனுஷ்கோடி நாடகம் நாரத கான சபாவில் நடை பெற்றது.

இந்த நாடகத்தை எழுதி இயக்கியுள்ள விவேக்சங்கரின் எளிமையும், ஆழமான வசன்ங்கள் சிறப்பானவை.  ஒரேயொரு சீன், அதாவது ஒரு பெரிய ஹாலின் ஒருபுறம் கிச்சன், மறுபுறம் பெட்ரூம், நடுவே அழகிய வேலைப்பாடுகளுடன் முகப்பு வைத்த மரத்தூண்களுடன் திறந்தவெளி முற்றம், ஹாலிலிருந்தே மாடிக்கு செல்லும் படிகள், வாயிற்கதவு, இரு ஜன்னல்கள், இதுவே நாடகத்தின் காட்சியமைப்பு.

இந்த நாடகம் பல ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடியில் புயல் வீசிய சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை.

அந்த காலகட்ட்த்தில் மூவாயிரம் ரூபாய் கையாடலை மாபெரும் தவறாக எண்ணிய மிக நேர்மையும், கண்டிப்பும் உடைய வங்கி அதிகாரிக்கும் அவரால் வேலை போகும் அபாயத்தில் உள்ள வங்கி கேஷியர் இருவருக்கும் இடையே நடக்கும் மனப் போராட்டம் மற்றும் அதன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை விளக்குபவை.

வங்கி அதிகாரியாக டி.டி. சுந்தரராஜன் சிறப்பாக நடித்திருக்கிறார்.  இந்த நாடகம் முதல் காட்சியில் இருந்து, முடிவு வரை மிகச் சிறப்பாக யதார்த்தமான நடிப்பில் முத்திரை பதித்திருப்பவர் காத்தாடி ராம்மூர்த்தி. ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் அவர் பேசும் உளறல் வசன்ங்களையும், அவர் டைமிங் சென்ஸ் தவறாமல் பேசி அசத்தி உள்ளது பாராட்டத்தக்கது.

ஒரே காட்சியில் வரும் வங்கி ஊழியர் பிரேமா சதாசிவத்தின் மடை திறந்த பேச்சு, பாராட்டலாம்.

ப்ரீத்தி, கவுசிக், சிவாஜி சதுர்வேதி, மூர்த்தி, அப்பாவி கேஷியராக ஆரம்பித்து வில்லனாக மாறும் பாலாஜி எல்லாருமே சிறப்பாக நடித்திருப்பது குறிப்பிட்த்தக்கது.

இறுதி காட்சி வரை என்ன நடக்குமோ என்ற திகில் உணர்வுடன் ரசிகர்களை திகைக்க வைத்திருக்கிறார் விவேக்சங்கர்.

நாடக இயக்கம், காட்சியமைப்பு, குறிப்பாக திறந்த முற்றம், கொட்டும் மழை, இடி, மின்னல், ஜன்னலுக்கு வெளியேயும் தெரிவது போன்ற அற்புதங்களுடன் கடைசி காட்சியில் கடல் அலை பொங்கி வருவது பிரமிப்பு ஊட்டுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு மூவாயிரம் ரூபாய் திருட்டு பெரும் குற்றமாக கருதப்பட்ட்து.  வாய்மை தவறி, உலகில் கெடு செயல்கள் நடைபெறும் போது கடல் பொங்கி உலகம் அழியும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.  அதை இந்த நாடகம் வலியுறுத்தியுள்ளது பாராட்டத்தக்கது.

நடிப்பில் காத்தாடி ராம்மூர்த்தி இந்த நாடகத்தின் உயிர்நாடி.

உஷா ஸ்டேஜ் விஜயகுமார், மோகன் பாபு (கலை), பெருமாள் பாபு (ஒளி), குக பிரசாத் (இசை), சிறப்பு ஒலி பாலச்சந்தர், சிறப்பு கலை நுணுக்கங்களுக்கு கிருஷ்ணமூர்த்தி, எழுதி இயக்கிய விவேக்சங்கர் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கும் சிறந்த நாடகம் இது.

–   மாளவிகா

Advertisements

தனுஷ்கோடி நாடக விமர்சனம் – கல்கி

November 9, 2010 Leave a comment

பிரம்மாண்டங்களின் காலம்

 

ஆனந்த் ராகவ்

 

(கல்கி 14.11.2010 தேதியிட்ட இதழில் பிரசுரமான விமர்சனம்)

Source: Kalki dated 14.11.2010

 

 

திரை விலகி ஒளி விழுந்ததும் தெரியும் பிரம்மாண்டத்தின் பிரமிப்பு அகல கொஞ்ச நேரம் ஆகிறது.  மேடை முழுவதையுமே ஆக்கிரமிக்கும் பெரிய வீடு.  விசாலமான கூடம், முற்றம், சமையல் அறை முகப்பு, மாடி அறைக்குப் படிகள், வலது பக்கம் படுக்கை அறை (விசையை தட்டினால் மின்விசிறி சுழல்கிறது!), நேர் எதிரே வாயிற்கதவு, அதன் பின் தெரியும் வேலியும் செடிகளும்.  இடி, மின்னல், வீட்டின் நடு முற்றத்தில் சடசடவென்று மழை பெய்யும் அழகு என்று வியப்படைய வைக்கிறது அரங்க அமைப்பு.

 

சிரத்தாவின் “தனுஷ்கோடி” நாடகத்தின் ஆரம்பக் காட்சி இது.  1964ல் ஏற்பட்ட பெரிய புயல் மழையில் தனுஷ்கோடி, வெள்ளத்தில் மூழ்கி அழிந்து போனது.  அந்த சூழலின் ஒரு இழையைப் பின்னனியாக்கி, வங்கி அதிகாரி ஒருவர், தன் அறிக்கையால் பாதிக்கப்பட்ட ஒரு ஊழியனால், தன் வீட்டில் சிறை பிடிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிக்கும் கதையைச் சொல்கிறது நாடகம்.

 

ஆரம்பக் காட்சியை விட அதிக பிரம்மாண்டத்துடன் மிளிர்கிறது நாடகத்தின் இறுதிக் காட்சி.

 

ராட்சத அலை அடித்து அந்த வீடும் (ஊரும்) மூழ்கிப் போவது ஆச்சர்யம்.  பல்வேறு நாடகக் குழுக்களில் இருந்து நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் திரட்டி ஒருங்கிணைத்து வித்தியாசமான நாடகங்களை நடத்த முனைந்திருக்கிற்து சிரத்தா.

 

சாதாரண வசனங்களையும் தம் உச்சரிப்பால் மெருகேற்றுகிறார் காத்தாடி ராமமூர்த்தி.  உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தும் சுந்தர்ராஜனும், தெளிவான வசன உச்சரிப்புடன் பாலாஜியும் போலீஸாய் வரும் கிரீஷும் பாராட்டுக்குரியவர்கள்.

 

உயிரிழப்பும் பொருட்சேதமுமாய் சரித்திரத்தில் பெரிய வடுவாகப் பதிந்து போன சோகமயமான நிகழ்வின் பின்புலத்தில் நடக்கும் நாடகம் என்பதால், அதன் கதையமைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகம்.  இந்த நாடகம் இன்னும் பெரிய கதைக் களத்தில், செறிவான பாத்திரப் படைப்புடன் மறு புனரைமைப்பு செய்தால் இன்னும் சிறக்கும்.  ஒரு பிரம்மாண்டமான சூழலை மேடையில் ஏற்படுத்த மேற்கொண்டு இருக்கும் முயற்சியும் அசாத்திய உழைப்பும் பாராட்டுதலுக்குரியன.

தனுஷ்கோடி – ஆனந்த விகடன் விமர்சனம்

November 9, 2010 Leave a comment

மேடையில் ஒரு சுனாமி

ஜ.ரா. சுந்தரேசன்

Source: Ananda Vikatan – Dated 10.11.10

(ஆனந்த விகடன் 10.11.10 தேதியிட்ட இதழில் பிரசுரமான விமர்சனம்)


சுற்றி சுழன்றடிக்கும் சுனாமி, இடைவிடாமல் கொட்டும் மழை, அவ்வப்போது உறுமும் புயல்காற்று…. இவை அனைத்தையும்  ஓரு நாடக மேடையில் கொண்டு வர முடியுமா?… “முடியும்” என்று நிரூபித்து இருக்கிறது ஸ்ரத்தா நாடகக் குழுவின் ‘தனுஷ்கோடி’ நாடகம்!

பல ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடியை புயல் விழுங்கிய பின்னனியில், நகைச்சுவையும் த்ரில்லரும் கலந்த கதை.  ஒரு கண்டிப்பான வங்கி அதிகாரி, அதே வங்கியின் மற்றொரு கிளையில் பணிபுரியும் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறார். தன் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக் கோருகிறார் அந்த ஊழியர். மறுக்கிறார் அதிகாரி.  உடனே, ஆஸ்துமா நோயாளியான அதிகாரியை கட்டிப் போட்டு மிரட்டுகிறார் ஊழியர்.  அதிகாரியின் நண்பர், ஒரு போலீஸ் ஏட்டு, ஒரு காதல் ஜோடி….இவர்கள் மூலம் அந்த அதிகாரி எப்படி மீட்கப்படுகிறார் என்பதே கதை.

ஒரே செட்டில் கதை நடப்பது புதிது அல்ல.  ஆனால், பெரியதொரு வீட்டிலும், அதைச் சுற்றியும், அதன் தாழ்வாரங்களிலும் உட்புறத்திலும், இடைவிடாமல் மழை ஒழுகுவதும், இடியும் மின்னலும், ஒலியும் ஒளியுமக அரங்கத்தையே கிடுகிடுக்க வைப்பதுமான தொழில்நுட்பத்தை இத்தனை சீராக இதுவரை எந்த நாடகமும் தந்தது இல்லை.

சுவையான, கெட்டிக்காரத்தனமான காம்பியர் போல கதையை நடத்திச் செல்லும் காத்தாடி ராமமூர்த்திக்கு ஸ்பெஷல் பாராட்டு.  ஆஸ்துமா நோயாளியான டி.டி. சுந்தர்ராஜன், குறும்புக்கார இளைஞனாக கெள்சிக் ஆகியோரின் நடிப்பு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று.

இழுத்துக் கட்டப்பட்ட ஸ்வரக் கம்பியை மீட்டுவது போல, தொட்ட இடம் எல்லாம் தொடர் சஸ்பென்ஸ்.  ஒரு சாதுவான கதாபாத்திரமாக அறிமுகம் ஆகி, வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் பாலாஜி.  கதையையும் உயிரோட்டமாக உள்ளே சஞ்சரிக்க வைத்த இயக்குநர் கே. விவேக்சங்கருக்கு வாழ்த்துக்கள்.  தனுஷ்கோடியில் இடி மழையுடன் கடல் பொங்கி வந்து கதவைத் தட்டுவதை கண் முன்னே காட்டிய ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்’ பாலச்சந்தர் கவனிக்கப்பட வேண்டியவர்.

அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் பலர் தாங்கள் நனைந்துவிட்டோமோ என்று தொட்டுப் பார்த்துக் கொண்டார்கள் என்பதுதான் இந்த நாடகத்தின் வெற்றி!

Dhanushkoti Review in The New Indian Express

November 1, 2010 2 comments

A Tamil play with a difference

Venkadesan S

First Published : 01 Nov 2010 11:02:00 PM IST,  Last Updated : 01 Nov 2010 12:20:27 PM IST

Source : The New Indian Express dated 1st Nov 2010

If you are bored of cliched Tamil plays with mundane plots and not-so-charming sets, then you should have watched Dhanushkoti that was staged at Narada Gana Sabha, in the city recently.

Kudos to Vivekshankar and the new theatre group Shraddha for having brought on stage, such an innovative concept. One tends to wonder how this brilliant plot could have been adapted for a theatrical production, through the course of the entire play.

Thiyagarajan (Thyagu), an unmarried sexagenarian, is a straight-forward bank inspection officer in Dhanushkoti. An asthma patient, he has a close friend Sambunathan (Sambu), who stays just two houses away to help him in need.

The play begins on a rainy evening, while Sambu waits for Thyagu to come back home from work. It gathers momentum when Madhavan, who is found guilty of cheating during Thyagu’s recent inspection, comes to the latter’s house and threatens him.The play shifts to the next gear, when a couple, who elopes from Chennai to get married in Dhanushkoti, enters the scene.

While other characters come and go, there is one character who makes its presence felt throughout — the rain. The rains find a permanent fixture in this play. Water actually pours down on the stage and nobody has ever attempted this before (special effects by Balachandar).

The setting of the house reflected the 1960s — with old ceiling fans, rotary dial phone and HAM radio contributing to the authenticity (Art direction by Mohanbabu).

Every actor in the play deserves to be lauded. TD Sunderrajan as Thyagu, Kaathadi Ramamurthy as Sambunathan, Preethi as Saratha, Kousic as Venugopal and the others, who made their presence felt with their minor roles, have contributed much to this production.

The story lost momentum, for a short while in between.

However, the climax stole the show. A tsunami strikes the town destroying evil. It was a stunning visual and cast a magical spell, making the audience go “Wow!”

Dhanushkoti Play – Share your experience with us

October 29, 2010 3 comments

Hello All,

We value your patronage and thank you for your presence at Naradha Gana Sabha for the Dhanushkoti Drama.

We value your comments and request you to share your experience with us here in the comments section of this post.

Thanks and Best Regards

K.Vivekshankar

Review of Dhanushkoti in Dinamani Tamil Newspaper

October 29, 2010 Leave a comment
கண்ணோட்டம்
தனுஷ்கோடி (நாடக விமர்சனம்)
வாசு
First Published : 29 Oct 2010 01:50:14 AM IST
நாடகத்தின் ஒரு காட்சி

கடந்த புதன்கிழமையன்று, நாரத கான சபாவின் சத்குரு ஞானானந்தா அரங்கத்தில், “ஷ்ரத்தா’ குழுவினரின் தனுஷ்கோடி நாடகம் நடத்தப்பட்டது. எழுதி, இயக்கியவர் கே. விவேக் ஷங்கர்.

1964-ம் வருடம் டிசம்பர் மாதம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் பெரும் புயலடித்து, வெள்ளம் பெருகி பாம்பன் பாலத்தில் பயணிகளோடு ரயில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட அந்த சோக நிகழ்வின் பின்னணியில் பின்னப்பட்டிருக்கிறது நாடகத்தின் கதை. தனுஷ்கோடியில் இருக்கும் ஒரு வீட்டில் கதை நடப்பதாகக் காட்டப்படுகிறது. அந்த வீட்டில் நடக்கும் சம்பவங்கள்தான் நாடகத்தின் மையம். அந்த வீட்டின் படுக்கை அறை, ஹால், மாடிப்படி, வீட்டு வாசல், கேட் என ஒரே “செட்’ நாடகம் முழுவதும் அசத்துகிறது. இடி, மின்னல், மழை, புயல்… என மாறும் வானிலையை மட்டுமே காட்டி, கதையை நகர்த்தியிருப்பது ரசனையோடு இருக்கின்றது. தொடர் மழையில் நனைந்து கொண்டிருக்கும் முற்றம்… மேடை நாடகத்திற்குப் புதுசு!

Read more…

K Vivekshankar’s Interview with Times of India on Dhanushkoti

October 29, 2010 Leave a comment

CENTRE STAGE

SRINIVASA RAMANUJAM

Source : The Times of India – Chennai Times, 29th October 2010

Dhanushkoti has many firsts — besides never-before-seen sets and superb acting, it’s perhaps the first time that the audience will get to see rain on stage! The play, which is based on an incident that happens in the backdrop of the floods in Dhanushkoti in 1964, is the brainchild of K Vivekshankar.
“The concept of doing a stage play with rain in the backdrop came to my mind five years ago. But the Dhanushkoti tragedy was in my mind right from childhood as it happened when I was eight,” he recalls.

The director hopes that audiences would come in large numbers to savour the sheer delight of watching rain on stage. “From the audience’s point of view, rain is the USP of the play. But for me, it’s a character and an integral part of the script,” says the director, who heaps praises on his technical team and the theatre group Shraddha for supporting him. Another highlight of the play is that it has     utilised the entire   stage. “My set is almost 42 feet and occupies the entire stage,” states the director, who has done several other plays. “In fact, there’s also a fan on stage and even that plays a role in the script! There are some small things like that, which have not been tried in Tamil theatre before.” He adds, “The challenge in theatre is that it’s live and there’s an immediate connect with the audience.”

Celebrate Tamil theatre by   watching this play at Narada  Gana Sabha this evening at 7.