Archive

Archive for the ‘Summer Drama Festival – 2010’ Category

Prayatna Stage’s “ID” – Review by Siragu Ravichandran

“ID” PLAY REVIEW BY SIRAGU RAVICHNDRAN (POPULAR CINEMA/DRAMA CRITIC)

Vivek Shankar shared Siragu RaviChandran’s post.
May 1 at 11:13pm •

ID 8

விவேக் ஷங்கரின் ஐ டி ( நாடகம் )
சிறகு இரவிச்சந்திரன்
0
சளைக்காமல் நாடகம் எழுதுவதிலும், அதை மேடையேற்றுவதிலும் விவேக் ஷங்கரின் பிரயத்தனா குழு ஒரு முன்னுதாரணம். இப்போதுதான் “நதிமூலம்” பார்த்த மாதிரி இருக்கிறது. உடனே இன்னொரு புதிய நாடகம். இம்முறை நதிமூலம் இல்லை! நாசவேலைகளின் மூலம், பவுத்திரம் எல்லாமும்!
ஹாக்கர்ஸ் எனப்படும், கணிப்பொறி வலைப்பதிவுகளில், கன்னம் வைப்பவர்களின் கதை. அதன் மூலம் சமூக விரோதிகள் தண்டிக்கப்படுவது மெசேஜ்! இன்செப்ஷன் என்று நீங்கள் கத்துவது தெரிகிறது. ஆனால் தமிழ் நாடக மேடைக்கு இந்தக் கரு ஒரு எக்ஸப்ஷன்!
ஒரே பெயர்.. இரு கதை மாந்தர்கள். அதனால் ஏற்படும் ஒரு கொலை. இதுதான் மைய இழை.
திவாகர் ( சூரஜ்) ஒரு கணிப்பொறி ஜீனியஸ். எந்த வலையிலும் புகுந்து புறப்பட்டு, சேதமில்லாமல் தப்பிக்கும் தந்திரம், அவனுக்கு அத்துப்படி. ஆனால் அதை பயன்படுத்தி, சட்டப்படி தண்டிக்க வேண்டியவர்களை, சிறையிலடைக்க அவன் உதவுகிறான். அவனுக்கு உறுதுணையாக இருக்கும் காவல் அதிகாரி பரமேஸ்வரன் அய்யர். ( கிரீஷ் ). திவாகரின் அறை நண்பன் கலியவரதன். ( மது ). பிள்ளையை அமெரிக்கா அனுப்பிவிட்டு, தனிமையில் வாடும் மேன்ஷன் பெரியவர் நரசிம்மன் ( டி டி சுந்தரராஜன்) இவர்களது பக்கத்து அறைக்காரர்.
கலியவரதனின் சொந்த ஊரில், திருநெல்வேலி பக்கத்திலிருக்கும் கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் ஐ ஏ எஸ் தேர்வு எழுத சென்னை வரும் திவாகர், அதே மேன்ஷனின் ஒரு அறையில் தங்குகிறான். ( இது என் யூகம். இது நாடகத்தில் தெளிவாக விளக்கப் படவில்லை ) கணிப்பொறி திவாகரை பழிவாங்க ஏவப்பட்ட கூலி படையன், ஐஏ எஸ் திவாகரைப் போட்டுத் தள்ளிவிட, தலைமறைவாக இருக்கும் ஒரிஜினல் டார்கெட் திவாகர், கொல்லப்பட்ட திவாகர் வீட்டிலேயே தங்குவது சின்ன டிவிஸ்ட். ஆனால், இதில் பழைய சிவாஜி படம் மாதிரி, உணர்ச்சிகளுக்கு எல்லாம் இடம் தராமல், கதையை ஜெட் வேகத்தில் நகர்த்திக் கொண்டு போகிறார் இயக்குனர் விவேக் ஷங்கர். கடைசியில் கூலிப்படை ஆள் பிடிபட்டானா? இறந்த திவாகரின் குடும்பம், இந்த திவாகரை மன்னித்ததா? என்பது க்ளைமேக்ஸ்.
சின்னதாக ஒரு திருப்பம் வைத்திருக்கிறார் ஷங்கர். தலைமறைவாகும் திவாகர், தன் பெயரில் உள்ள ஒரு நபரின் புகைப்படத்தை, தன் அடையாளமாக மாற்றி விட்டுச் செல்கிறான். அதனால் கிராமத்து திவாகர் கொலையாகிறான். இது ஒரு காட்சியாக அமைக்கப்பட்டிருந்தால் இன்னமும் தெளிவாக புரிந்திருக்கும் பார்வையாளர்களுக்கு. ஆனால் இரண்டு வரி வசனத்தில் அதைச் சொல்லி விடுகிறார் விவேக் ஷங்கர்.
கொல்லப்பட்ட திவாகரின் கிராமத்து அக்கா ஜானகியாக பிரேமா சதாசிவம். அனுபவம் அவரை முதலிடத்தில் நிறுத்துகிறது. வழக்கம்போல கிரீஷ் பாஸாகிறார். ஆச்சர்யம், கனமான பாத்திரத்தில் கதை நாயகனாக நடித்திருக்கும் சூரஜ். சபாஷ்! புலம்பல் தாத்தாவாக வரும் சுந்தரராஜன், அரங்கில் அதிகம் கைத்தட்டல் பெற்றவர். யதார்த்தம் பாராட்டைப் பெறுவதில் அதிசயம் ஏதுமில்லை!
தினேஷின் இசை நாடகத்திற்கு பக்க பலம். இன்னும் கொஞ்சம் இசைத்திருக்கலாமோ என்று தோன்றுமளவிற்கு அற்புதம். சேட்டா ரவியின் ஒளி ஜாலங்கள் மேடைக்கு மெருகு.
விந்தையான கதைகளை யோசிக்கும் விவேக் ஷங்கர், அடுத்தது ரோபோக்களை வைத்து நாடகம் எழுதுவாரோ? ஷங்கர் என்று பெயர் இருக்கிறதே செய்தாலும் செய்வார்!
நூறு நிமிட நாடகம். நறுக் வசனங்கள். இயல்பான நகைச்சுவை. தேர்ந்த நடிப்பு. வெற்றி பெற இவைதானே ஃபார்முலா! நம்பர் ஒன்னாக வரும் இந்த ஐ டி! வாழ்த்துக்கள்!
0
Like • Comment • Share

Advertisements

Summer Drama Festival – Hindu review

From sentiment to suspense

KAUSALYA SANTHANAM

There were very few ‘wow’ moments and plenty of passé plots at the Kodai Nataka Vizha.

Diverse themes:Andha Saravananai Chutri.

(The second and concluding part of Kodai Nataka Vizha)

The sets of Gurukulam’s ‘Narkalikku Idamillai’ pepped one up for they depicted the living room of a flat with bright orange window frames. Something different, one felt. But when the play began, the lead and only character till the intermission, embarked on his monologue, large portions of which were devoted to the travails of old age!

In ‘Narkalikku Idamillai,’ the son asks the father to de-clutter the apartment. This sets the elderly man thinking – on the plight of senior citizens, the generational divide, sorrow at the loss of his father, his migration to the city and above all, the Chair — his father’s chair which carries so many associations for him and which his son wants him to discard.

The lead actor, Madhava Bhoovaraha Moorthy, also the writer and director of the play, displayed his ability to sustain a monologue and the fact that he is a seasoned artist. But it was all so tedious.

The second half of the play thankfully brought in more characters. One was the old man Srinivasan’s wife Lakshmi (Malathy Sampath), who put forth some sensible arguments in favour of their son. Another was the son Bhardwaj, played by J. Venkatasubramanian. The third was his friend Mahesh (S.G. Karthik) who let off steam regarding his plight, being caught between two generations – an elderly capricious father and his own demanding children. There were a few others who lent support in varying degrees when the lead actor was willing to give them the space. The scene where Bhardawaj countered the arguments of his father and dealt with his peeves, from cell phones to the lost art of letter writing, was the best part of the play. The arguments were well formulated and expressed.

If only the incidents that made up the monologue were not so swamped in self-pity and sentimentality, the first half too could have been redeemed. Venkatasubramanian was a good foil. But B.R. Jayanthi who played Srinivasan’s mother, looked younger than he and was understandably stiff and uncomfortable in the role. The writer who showed his command in the medium had a lot to say on a number of issues, some of which have been heard many times before. But his views on a few were refreshing. The play dealt with the inevitability of change, the need to accept it and evolve with the times. And so one learnt at the end, if one had the will power to stay through the first half.
Read more…

KODAI NATAKA VIZHA – KARTIK FINE ARTS – PRIZE WINNERS

KODAI NATAKA VIZHA 2011    –      PRIZE LIST

BEST ACTOR I –  M.B.MOORTHY –  NARKALLIKU IDAMILLAI – GURUKULAM

BEST ACTOR II – POTHILINGAM –  ANDHA SARAVANANAI SUTRI –  AUGUSTO CREATION

BEST ACTRESS I  – MRS.UMA SHANKAR –  ANDHA SARAVANANAI SUTRI  – AUGUSTO CREATION

BEST ACTRESS II – MALATHI SAMPATH – NARKALLIKU IDAMILLAI – GURUKULAM

BEST CHARACTER ACTOR I –  JAYA SURYA  – KARUPPU ADUKAL  – SOWMYA

BEST CHARACTER ACTOR II – MADHU –  SWASAM –  MOTHER CREATIONS

BEST CHARACTER ACTRESS I  – ANANTHI –  MAMIYAR 65@HOTMAIL .COM  – GOODWILL STAGE

BEST CHARACTER ACTRESS II  – BRINDHA  –  SANGAMAM  –  BINDHU STAGE

BEST STORY WRITER I –  T.V.RADHA KRISHNAN –  KARUPPU ADUKAL  – SOWMYA

BEST STORY WRITER II S.L.NANU NEENKALE SOLLUNGAE STAGE CREATIONS

BEST DIALOGUE I –  M.B.MOORTHY  –  NARKALLIKU IDAMILLAI –  GURUKULAM

BEST DIALOGUE II  – EZHICHUR ARAVINDAN –  SOLLATHAN NINAIKIREN –  SATYA SAI CREATION

BEST DIRECTOR I –  C V CHANDRA MOHAN –  SWASAM   –  MOTHER CREATIONS

BEST DIRECTOR II  –  AUGUSTO  –  ANDHA SARAVANANAI SURRI  – AUGUSTO CREATION

BEST COMEDIAN I  –  ANANTHU  – NAIYANDI VILAS  –  RAIL PRIYA

BEST COMEDIAN II  –  KRIPA  –   NAIYANDI VILAS   –  RAIL PRIYA

SPECIAL PRIZE ACTOR I   –  GIRIDHARAN  –   SHYAMALAM  –   DUMMIES DRAMA

SPECIAL PRIZE ACTOR II  –   SBI MURALI  –   NEENKALE SOLLUNGA  –   STAGE CREATIONS

SPECIAL PRIZE ACTRESS I  –   GOWTHAMI   –  SANGAMAM  –   BINDHU STAGE

SPECIAL PRIZE ACTORESS II   –   VIJAYALAKSHMI   – MAMIYAR 65@HOTMAIL .COM   –  GOODWILL STAGE

BEST CHILD ARTIST I  –   LAKSHMI NARAYANAN   –  KANMANIYE PESU  –   AJAY ENTERTAINERS

BEST CHILD ARTIST II  –   APPOORVA  –   SHYAMALAM   –   DUMMIES DRAMA

BEST DRAMA PRODUCTION I   –  M.B.MOORTHY  –  NARKALLIKU IDAMILLAI   –  GURUKULAM

BEST DRAMA PRODUCTION II   –  M.JAYAKUMAR  –   SWASAM  –   MOTHER CREATIONS

BEST LIGHT COMPANY I   –  KALAIVANAR ELECTRICALS   –  SWASAM  –   MOTHER CREATIONS

BEST SCENE COMPANY I  –   USHA STAGE   –  ANDHA SARAVANANAI SUTRI  –  USHA STAGE

SPECIAL PRIZE  –   MADURAI RAJAMANI  –   MEIYE UN PON ADIGAL  –   SRINI CREATION

Kodai Nataka Vizha – Hindu review

Full of clichés

KAUSALYA SANTHANAM

Contrived dialogue and predictable treatment gave the plays a dated quality.

Promoting theatre:‘Shyamalam’ and (right) ‘Karuppu Aadugal.’

The Summer Drama Festival organised by Kartik Fine Arts has been consistently promoting the cause of Tamil mainstream theatre. The Kodai Nataka Vizha annually premieres nine plays but this year there were a dozen. The festival was held from April 22 to May 3 at the Narada Gana Sabha hall, Chennai. There was quite a good response to the plays to which entrance was free.

There is an old world charm in waiting for a play to begin as it is preceded by the muffled sound of prayers being offered behind the closed curtain, and the tinkling of the prayer bell. But when it comes to theme and presentation, one expects something new. Unfortunately, when the screen opened on the inaugural play ‘Sollathan Ninaikkiraen’ written by Ezhichur Aravindan and directed by Mappillai Ganesh, one saw the familiar sets, with artificial flowers in brackets on the wall and the much viewed interior of a middle class home. And my heart sank.

The feeling of anticipation gave place to déjà vu as the familiar scenes of the daughter-in-law harassing her elderly widowed father-in-law were played out. With the entrance of stock figure of the next door neighbour, a true friend of the old man, and the refusal of the daughter-in-law to provide a meal for the latter, things went from bad to worse. The woman was of course a shrew who dominates over her long suffering husband.
Read more…

Drama Reviews from theatre lovers – “Yaathumaagi Nindraai”

Drama reviews from nataka rasikas for the play, “Yaathumaagi Nindraai” by M.B. Moorthy    produced by Gurukulam   presented at the Summer Drama Festival 2010 at Chennai:

Yaathumaagi Nindraai

யாதுமாகி நின்றாய்  – விமர்சகர் TK சீனிவாசன்

பொருளாதாரத் தேவைக்காக மட்டுமல்லாது கல்வி சிறப்பாலும் மகளிர் வேலைக்குப் போகும் தற்கால சூழ்நிலையால் உண்டாகும் பிரச்சனைகள், மனக்கிலேசங்களை சித்தரிக்கும் நாடகம்.

பிரியா, கோகுல், சரத் – ஒரு சிறிய அன்யோன்யக் குடும்பம்.  இல்லத்தரசி பிரியா தான் வேலை செய்யும் கம்பெனியின் ஒரு முக்கியமான ப்ராஜக்ட்டின் லீடராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்காக கடுமையாக உழைப்பதால் கோகுலுக்கு ஏற்படும் மனவிகாரங்களை நாடகம் விளக்குகிறது.

அலுவலக “பாஸ்”, பாஸ்கர் முழு உற்சாகத்துடன் பணிபுரிய, பிரியாவை முடுக்குவதற்காக அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வருகிறார்.  அவரால் ஈர்க்கப்பட்டு குழந்தையும்  அவரிடம் நெருக்கமாகிறான்.  இதன் தூய்மையை புரிந்து கொள்ளாமல் அழுக்காறு கொண்டு, கோகுல் ப்ராஜக்ட் வெற்றியடையாமல் செய்ய எடுக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் அவனது மனநிலையை பாஸ்கரால் புரிந்து கொள்ள முடிகிறது.

Read more…

Drama Reviews from theatre lovers – “NEENGA YAAR PAKKAM”

June 23, 2010 1 comment

Drama reviews from nataka rasikas for the play, “Neenga Yaar Pakkam” by S.L. Naanu   produced by Stage Creations  presented at the Summer Drama Festival 2010 at Chennai:

நீங்க யார் பக்கம்? – விமர்சகர் ராஜேஸ்வரி சீனிவாசன்

நாடகத்தலைப்பு, நடிப்பாற்றல் சிறப்பு பற்றிய வினாவானால் நம் ஒருமித்த விடை – சிவராமனாக நடித்து அனாயசமாக ஸ்டேஜை ஆக்கிரமித்த காத்தாடிதான்!.  சிறந்த நடிப்புக்கான பரிசை நிச்சயமாக கொடுக்கலாம்.

ஏனைய கதாபாத்திரங்களும் சிறப்பாக பணிபுரிந்தார்கள். சிவராமனின் நான்கு நண்பர்களின் சம்பாஷனைகளால் நாடகம் நன்றாக நகர்கிறது.  சிவராமனை எப்பாடுபட்டாவது அமெரிக்கா அனுப்ப அவர்களுக்கிடையே போடப்படும் bet – 45 வருஷம் ஆசையாக வளர்த்த மீசை இழப்பா அல்லது சிவராமனுக்கு மொட்டையா – என்ற நகைச்சுவை சவாலால் சுவாரசியம் கூடுகிறது.

மருமகள் அட்லாண்டாவுக்கு மாறுதலாகி போயிருப்பதால் சமையல் ஏதும் கற்றுக் கொள்ளாத மகன் சுரேஷ் அவசரமாக அவசியமாக பெற்றோர் அமெரிக்கா வரவேண்டி முயற்சிக்கிறான்.  சிவராமன் நிர்தாட்சண்யமாக நிராகிக்கிறார்.  மகன், மருமகள் முயற்சிக்கும் வேறு வழிகளும் (படிப்புக்கடன் சுமையை அப்பா தீர்க்க வேண்டும், சுரேஷ் தாங்காத வயிற்றுவலியினால் அவதிப்படுகிறான் – இத்தியாதி) விழலுக்கு இரையாகின்றன.

Read more…

Drama Reviews from theatre lovers – “ENAKKUL IRUVAR”

Drama review from nataka rasikas for the play, “Enakkul Iruvar” by Ananthu  produced by Rail Priya presented at the Summer Drama Festival 2010 at Chennai:

எனக்குள் இருவர்   – விமர்சகர் TK சீனிவாசன்

கதை, வசனம், முக்கிய கதாபாத்திரம் எற்று அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது – ஆகிய எல்லாவற்றிலும் மிளிரும், ‘பட்டாபி – அனந்து’ வுக்கு ஒன்று அல்ல சில பல விருதுகள் கொடுக்கலாம்!

அவர் கண்ணுக்கு மட்டுமே புலப்படும் நல்ல மனது, கெட்ட மனதாக வரும் கதாபாத்திரங்கள் நிதானமாகப் பேசி பட்டாபியை அல்லாடச் செய்வது சிறப்பு.  இவர்கள் “நான் தான் நீ” , “நீ தான் நான்  “ என்று பேசி அவரவர் குணாதிசியங்களை வெளிப்படுத்தி பட்டாபியை தம் வசப்படுத்துவ்கிறார்கள்.  இறுதியில் பட்டாபி நல்லது-கெட்டது இரண்டும் தேவை என்ற முடிவுக்கு வருவதாக தங்களுடன் சொல்வது நன்றாக இருக்கிறது.

“நல்லவன்னா இளிச்சவாயனா” , “உன் கடிக்கு அந்த அடி பரவாயில்லை “ போன்ற வசனத்துணுக்குகள் நன்றாக இருந்தன.

நல்ல மனதின் தாக்கத்தில், அமெரிகையாக பேசி தன் வயப்படுத்திக் கொள்ள முயலும் சாதுர்யம் – கெட்ட மனதின் ஆக்கிரமிப்பில் ஆரவாரமாக ஆட்கொள்ளும் அதிகாரத்தோரணை – இந்த இரண்டிலும் சிறப்பாகப் பேசி நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் அனந்து – பட்டாபிக்கு சிறந்த நடிகர் பரிசு கொடுக்கலாம்.  “இவரது மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரிது”!

மொத்தத்தில் மனித யதார்த்தத்தை நகைச்சுவையோடு சுவாரசியமாக கொடுத்த சிறந்த நாடகம்.

Read more…